×

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் : தடுப்பூசி செலுத்திய 7ல் ஒருவருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் 3ம் கட்ட பரிசோதனையில் பின்னடைவு!!

மாஸ்கோ : ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தன்னார்வலர்களில் சுமார் 14 சதவிகிதத்தினருக்கு பலவீனம், தற்காலிக தசை வலி மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக உலக மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. தடுப்பு மருந்து கண்டறியப்படாததால், லட்சக்கணக்கான மக்கள் இறந்தும், கோடிக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதித்தும் வருகின்றனர். நோயை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் பல நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்தது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஸ்புட்னிக்-வி பக்கவிளைவுகள் குறித்து ரஷ்யச் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்ததாக வெளியாகியுள்ள ரஷ்ய ஊடக செய்தியில், தடுப்பூசியின் சோதனை முடிவுகள் 100 சதவீத பங்கேற்பாளர்களில் கடுமையான பக்கவிளைவுகளையோ, நிலையான நோயெதிர்ப்பு சக்தியையோ காட்டவில்லை.

ஸ்புட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியின் இறுதி மருத்துவ பரிசோதனைகள் தற்போது நடந்து வருகின்றன.40,000 தன்னார்வலர்களில் 300க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ள சூழலில் ஏறக்குறைய 14 சதவிகிதத்தினர் பலவீனம், தற்காலிக தசை வலி மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற சிறிய பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளனர் என்று முராஷ்கோ தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முராஷ்கோவின் கூற்றுப்படி நவம்பர் 3 அல்லது டிசம்பர் தொடக்கத்தில் பொது மக்களுக்கு ஸ்புட்னிக் வி விநியோகிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Russia ,phase test , Russia, Corona, Vaccine, Problem, Side Effects, Testing, Relapse
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...