×

2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது; மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் தகவல்

டெல்லி: 2020 - 21 கல்வியாண்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு ஆனது ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் மற்றும் தொலைக்காட்சி வழியாகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தொலைக்காட்சிகளை விட அந்தந்த பள்ளிகளின் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் தான் பிரதான ஆயுதமாக இருந்து வந்தது.

இதனிடையே வரும் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் நாட்டில் 12 முதல் 15 சதவிகித மாணவர்கள் மட்டுமே ஆன்லைனில் கல்வி கற்பது குறித்தும், நடப்பு கல்வியாண்டு பூஜ்ய கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா என்பது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார். அதில், திக்‌ஷா, ஸ்வயம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வானொலி மூலமாகவும் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதாக ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

Tags : Ramesh Pokri ,Lok Sabha , The 2020 - 21 academic year cannot be strictly canceled; Information in the Lok Sabha by Union Minister Ramesh Pokri
× RELATED ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!