×

தாய்மார்களுக்கு தையல் மிஷின்கள், கல்வி உதவி தொகை, இலவச கண்சிகிச்சை : பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!!

சென்னை: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக இளைஞர் தலைவர் வினோஜ் செல்வம் ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள் விழா இன்று பாஜக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோளை ஏற்று, பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் ஏற்பாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சென்னையில் பல்வேறு கோவில்களில் மோடி நீடுழி வாழ வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல மோடியின் 70வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் ஏற்பாட்டில் 70 தாய்மார்களுக்கு தையல் மிஷின்கள், 70 பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, 70 கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் டேப், 70 பேருக்கு இலவச இருதயம் மற்றும் கண்சிகிச்சை மற்றும் 700 மாணவர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இதே போல தமிழகம் முழுவதும் பாஜக இளைஞர் அணியினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Tags : mothers ,Modi ,birthday ,BJP ,eve , Sewing machines, scholarships, ophthalmology, PM Modi, BJP, aids
× RELATED அமெரிக்க நாட்டு இரு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு