×

'பெரியாருக்கு முன்', 'பெரியாருக்குப் பின்'என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்' : கமல்ஹாசன் ட்வீட்!!

சென்னை : பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரியாரை நினைவுகூர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் பலர் பெரியார் குறித்து பதிவிட்டு வருகின்றனர். சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பெரியார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மானுட சமுதாயத்திற்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர்-17!. அய்யா ஊட்டிய சமூகநீதி-சமத்துவம்-சாதியொழிப்பு-பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம்!. மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!. தந்தை பெரியார் வாழ்க! சுயமரியாதைச் சுடர் வெல்க! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில், பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் என பதிவிட்டுள்ளார்.

Tags : Ninga ,Periyar ,Tamils ,Kamal Haasan , Periyar, Tamils, Historian, Kamalhasan, Tweet
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு