×

தலைவர் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் கிடைத்தது. கொரோனா நெகட்டிவ் வந்தது : ரஜினி ரசிகர் முரளி உற்சாகம்!!

மும்பை : தலைவர் பேசியதைக் கேட்ட சிறிது நேரத்தில் கொரோனா நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவில் உறுதியானதாகவும், உடல்நலம் சரியாகி கண்டிப்பாக தலைவரைச் சந்திப்பேன் என்றும் ரஜினி ரசிகர் முரளி உற்சாகத்துடன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான முரளி என்பவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சமயத்தில் அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது.

இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் சமீபத்தில் தனது கடைசி ஆசையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  தாம் இனிமேல் பிழைக்க மாட்டோம் என நினைத்த முரளி, “தலைவா என் இறுதி ஆசையானது, 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க. ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தைரியமாக இருங்க. தைரியமாக இரு. வாழ்க என்று ரஜினி தெரிவித்துள்ளார்.தற்போது இந்த ஆடியோவும் வைரலாகி வருகிறது.

இந்தச் சமயத்தில் ரஜினி ஆடியோ குறித்து முரளி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:தலைவர் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் கிடைத்தது. அதிசயம் நடந்தது, அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகட்டிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. இவ்வாறு முரளி தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,Corona Negative ,Rajini fan Murali , Leader Rajinikanth, Blessings, Corona, Negative, Rajini Fan, Murali, Excitement
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...