×

அமராவதி அணையிலிருந்து வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: அமராவதி அணையிலிருந்து வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட விவசாயிகளிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 6,048.00 மி.கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக அமராவதி பிரதான கால்வாய் வழியாக 2,661.00 மி.கன அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 8,709.00 மி.க. அடிக்கு மிகாமல் வரும் 20-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு, பிப். 2-ம் தேதி முடிய அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 51 ஆயிரத்து 803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,dam ,Amravati , Chief Minister Palanisamy has ordered to open the water from the Amravati dam from the 20th
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...