×

புரட்டாசி தரிசனத்திற்கு தயாராகும் தென் திருப்பதி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. மலைக்கோயிலான இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் பக்தர்கள் வருவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

வருகிற 19ம் தேதி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டாள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கோயில் முழுவதும் வர்ணம் தீட்டும் பணி, பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வந்து செல்ல தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கோயிலில் வெயில், மழையிலிருந்து பக்தர்களை பாதுகாக்க மேற்கூரை அமைக்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்து வருகின்றனர்.

முன்னதாக சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களை சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய வைப்பது உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சப்கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் திருவில்லிபுத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Tags : South Tirupati ,Purattasi Darshan , Purattasi, South Tirupati
× RELATED பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் 2 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை..!!