×

செம்பதனிருப்பு கிராமத்தில் அரசு வாய்க்காலை வயலாக மாற்றிய தனி நபர்

சீர்காழி: செம்பதனிருப்பு கிராமத்தில் அரசு வாய்க்காலை வயலாக மாற்றி வைத்துள்ள தனிநபரிடம் மீட்டு தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தென்பாதி வாய்க்காலில் இருந்து பிரிவு வாய்க்கால் பிரிந்து நன்டோடை ஆற்றில் கலந்து வந்தது. இந்த வாய்க்கால் அந்த பகுதியை சேர்ந்த 400 ஏக்கர் விளை நிலங்களுக்கு வடிகாலாகும். பாசனத்திற்கும் பயனளித்து வந்தது. இந்த வாய்க்காலை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தங்களுக்கு சொந்தமான வாய்க்கால் எனக்கூறி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை முழுமையாக தூர்த்து வயலாக மாற்றி விட்டனர். வாய்க்கால் துகர்ப்பட்டதால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிய முடியாமல் வயல்களில் தேங்கி நின்று விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

விவசாயிகள் வாய்க்காலை ஆக்கிரமித்து செய்தவர்களிடம் வாய்க்காலை ஏன் தூர்த்தீர்கள் என கேட்டதற்கு எங்களுக்கு சொந்தமான வாய்க்கால் அதனால் தூர்த்து விட்டோம் என கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த விவசாயிகள் அரசு வரைபடத்தை அதிகாரிகள் மூலம் வாங்கிப் பார்த்தபோது தனி நபர்களால் துகர்ப்பட்ட வாய்க்கால் அரசுக்கு சொந்தமான சி பிரிவு வாய்க்கால் எனவும் சர்வே எண்கள் 489 415 எனவும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை சர்வேயர் மூலம் அளந்து மீட்டுத்தரக் கோரி மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் சீர்காழி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சீர்காழி தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் புகார் மனு கொடுத்தனர்.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வாய்க்காலை தனிநபர்கள் பல ஆண்டுகளாக சுவடே தெரியாமல் ஆக்கிரமித்து துகர்த்து வயலாக மாற்றி இருப்பதை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை மீட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : individual ,village , Sirkazhi, government, occupation
× RELATED 10ம் வகுப்பு தேர்வுசிவகங்கையில் 17,867 பேர் எழுதினர்: 301 பேர் ஆப்சென்ட்