×

குளிர்காலத்தில் இந்திய ராணுவத்தால் செயல்பட முடியாது என சீன ஊடகத்தில் செய்தி எதிரொலி: சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என இந்தியா பதிலடி

டெல்லி :லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறுவதால் அந்நாட்டுடன் முழு அளவிலான போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அதிரடியாக அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி  உள்ளது. கடந்த மே மாதம் காஷ்மீரை அடுத்த கிழக்கு லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், அதில் இருந்து முழுமையாக வெளியேற மறுத்து வருகின்றனர். ஒருபுறம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் மறுபுறம் லடாக் எல்லையில் அவ்வப்போது தாக்குதல்களையும் சீன ராணுவம் நடத்தி வருகிறது. இதனால் பொறுமை இழந்துள்ள இந்திய ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது.

இதனிடையே சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் இந்தியாவின் ராணுவ வளத்தை குறைத்து செய்தி வெளியிட்டுள்ளது. குளிர்காலத்தில் இந்திய ராணுவத்தால் செயல்பட முடியாது என்று அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்துள்ள இந்திய ராணுவம், சீனாவுடன் முழு அளவிலான போருக்கு தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் லடாக் எல்லையில் போர் மேகங்கள் சூழத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே லடாக்கை அடுத்த கல்வான் பள்ளத்தாக்கில் 2 மாதங்களுக்கு முன்பு 20 இந்திய வீரர்களை சீன ராணுவம் அடித்து கொன்றதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றனர். 


Tags : Echo ,Chinese ,military ,war ,Indian , Winter, Indian Army, Chinese Media, India
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...