×

5 மாதங்களுக்கு பின் திருச்சியில் தனியார் பஸ்கள் இயங்கின

திருச்சி: திருச்சியில் தனியார் பஸ்கள் இன்று இயங்கின. முதல் நாளான இன்று குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. சீட்டுக்கு ஒருவர் மட்டும்தான் அமர அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 1ம் தேதி பொது போக்குவரத்து துவங்கியது. மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

அரசு, தனியார் பஸ்களை 50 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. 60 பயணிகள் சென்ற ஒரு பஸ்சில் 30 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களிலும் அரசின் இந்த விதிமுறைதான் உள்ளது. தற்போது டீசல் விற்கிற விலைக்கு அது கட்டுப்படியாகாது. மேலும், கூடுதல் பயணிகளை ஏற்றிச்சென்றால் சோதனை செய்து அபராதம் விதிப்பார்கள். எனவே, அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் என கருதி தனியார் பஸ்களை இயக்குவதில்லை என திருச்சி மாவட்ட தனியார் பஸ்கள் உரிமையாளர்கள் ெதரிவித்திருந்தனர்.

இதையடுத்து திருச்சி நகர் புறங்களில் 140, புறநகர் பகுதிகளில் 160 பஸ்கள் என 300 தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தொழிலாளர்களின் நலன் கருதி நகர் புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் பஸ்கள் ேநற்று இயங்கியது. மாஸ்க் கட்டாயம், கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப 50 முதல் 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

ஒரு சீட்டில் ஒருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக பஸ்சில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது. மத்திய பஸ் நிலையத்தில் ரங்கம் பகுதிக்கு சென்ற பஸ்களில் மக்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியின்றி முந்தியடித்து ஏறினர். முதல்நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலே பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் வருகையை பார்த்து 100 சதவீத பஸ்கள் இயங்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Trichy , Trichy, private bus
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...