×

அக்கா, தங்கைக்கு குழந்தை திருமணம்: சமூக நலத்துறையினர் மீட்டனர்

வேலூர்: பேரணாம்பட்டு அருகே அக்கா, தங்கைக்கு அடுத்தடுத்து 17, 16 வயதிலேயே திருமணம் நடந்ததை சமூநலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று தடுத்து மீட்டனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மேல்பட்டியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடப்பதாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முருகேஷ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா தலைமையில் சமூக நலத்துறையினர் மேல்பட்டி போலீசாருடன் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், பிளஸ் 2 முடித்த 17 வயது மாணவிக்கும், அதேபகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதற்கு முன்பு 2 வாரங்களுக்கு முன்பு அந்த மாணவியின் 16 வயதுடைய தங்கைக்கும் குழந்தை திருமணம் நடத்தியிருப்பது தெரியவந்தது. அக்கா, தங்கை 2 பேரையும் மீட்டு சமூகநலத்துறையினர் குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அக்கா, தங்கை 2 பேருக்கும் குழந்தை திருமணம் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sister , Sister, child marriage to sister: Social Welfare recovered
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’