×

கொரோனா முந்தைய அளவுக்கு உயர்ந்தது பெட்ரோல் விற்பனை

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை அடியோடு சரிந்தது. ஊரடங்கு தளர்வுகளால் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நடப்பு மாதத்தில் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விற்பனை முந்தைய ஆண்டை விட 2 சதவீதம் அதிகமாகவும், கடந்த ஆகஸ்ட்டை விட 7 சதவீதம் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.டீசல் விற்பனை முந்தைய ஆண்டை விட 5.5 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால், முந்தைய மாதத்தை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பழைய நிலையை டீசல் விற்பனை அடைய இன்னும் 6 சதவீதம்தான் உயர வேண்டும். இதுபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சமையல் காஸ் விற்பனை 13 சதவீதம், விமான பெட்ரோல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவனங்களின் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

Tags : Corona , Corona sales of petrol rose to an all-time high
× RELATED கொரோனா பாதிப்பால் செட்டிநாடு பலகாரம் விற்பனை மந்தம்