×

சுகாதாரம், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்: கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: திருவள்ளுர் ஒன்றியம் விஷ்ணுவாக்கம் அங்கன்வாடி மையத்தில் குடற்புழுத் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய முதல் சுற்று குடற்புழு நீக்க வாரம் வருகின்ற 19 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2 வது சுற்று 21 முதல் 26 தேதி வரையும், விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 28ம் தேதி அனைத்து துணை சுகாதார மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது. குடற்புழு நீக்கத்திற்காக அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 1 முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், பள்ளிச் செல்லாத 1 முதல் 19 வயதுவரை அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் மாத்திரை கீழ்காணும் விகிதத்தின்படி மையத்தில் வழங்கப்படும்.

1 முதல் 2 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல்  1/2 மாத்திரை, 2 முதல் 19 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 754 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் மாத்திரை 338 துணை சுகாதார மையங்கள் மற்றும் 1822 அங்கன்வாடி மையங்களிலும் மொத்தம் 2 ஆயிரத்து 160 மையங்களில் 1803 அங்கன்வாடி பணியாளர்கள் 532 சுகாதாரப் பணியாளர் மூலமாகவும் மொத்தமாக 4 ஆயிரத்து 367 பணியாளர்கள் மூலமாகவும் தேசிய குடற்புழு நீக்க நாளில் மாத்திரைப் பெற முடியாத குழந்தைகளுக்கு வரும் 28 ம் தேதி அனைத்து துணை சுகாதார மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Anganwadi Centers: Collector Information , Deworming tablets will be provided at Health and Anganwadi Centers: Collector Information
× RELATED யானை தாக்கி விவசாயி பலி