×

சலுகைகள் ரத்து செய்ததை கண்டித்து வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: ஊழியர்களின் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பண பலன்களை ரத்து செய்ததை கண்டித்து வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல்மின் நிலைய நுழைவாயிலில் ஊழியர்களுக்கு எதிரான மின்வாரிய செயல்பாடுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய மின்ஊழயிர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்காவிட்டாலும், அவர்கள் பெற்று வந்த சலுகைகள் பறிக்கப்பட்டன. ஊழியர்களின் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்களை மின்வாரியம் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது என்றும், ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 


Tags : protest ,North Chennai Thermal Power Station ,cancellation , Employees of North Chennai Thermal Power Station protest against the cancellation of concessions
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது...