×

ஆரணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஏன். என். குப்பம் ஊராட்சியையொட்டியுள்ள ஆரணி ஆற்றில் 40 வயது தக்க ஆண் சடலம் மிதப்பதாக கவரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தற்கொலை செய்து கொண்டாரா இல்லையெனில் யாராவது அடித்து கொலை செய்துவிட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : corpse recovery ,Arani ,river , Male corpse recovery in Arani river
× RELATED கிணற்றில் ஆண் சடலம் மீட்பு