×

திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை அருகே பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் நேற்று திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பெருமழை, வெள்ள காலத்தில் சிக்கினால் அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் பாஸ்கரன், நிலைய அலுவலர் செல்வராஜ், தீயணைப்பு அலுவலர்கள் வெங்கடேசன், ஞானவேல், வருவாய் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருகின்ற வடகிழக்கு பருவமழையை  முன்னிட்டு எதிர்பாராமல் ஏற்படும் பெரும் மழை காலங்களில் பொதுமக்கள் சிக்க நேர்ந்தால் அவர்களை எவ்வாறு வீட்டிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களை கொண்டு காப்பாற்றுவது என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர். பின்பு அவர்கள் கோயில் குளத்தில் ரப்பர் போர்ட் லாரி டியூப்புகள், தெர்மாகோல், டயர்கள், பிளாஸ்டிக் குடம், கயிறு,காலியான வாட்டர் பாட்டில்கள் போன்றவற்றின் மூலம் நீரில் சிக்கியவர்களை மீட்டு கொண்டு வருவது குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இதனை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.  

திருத்தணி: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் வருவாய் துறை சார்பில், ஆர்.கே.பேட்டை வட்டத்தில் பொதுமக்களுக்கு பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில்  ஆர்.கே.பேட்டை அருகே சின்ன நாகபூண்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு வட்டாட்சியர் சாந்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கோ.பார்த்திபன் வரவேற்றார். திருத்தணி ஆர்.டி.ஒ சத்யா துவக்கி வைத்தார்.

பள்ளிப்பட்டு தீணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்கள் மற்றும் அடித்து செல்பவர்களை எவ்வாறு மீட்பது குறித்து அங்குள்ள குளத்தில் பயிற்சி அளித்தனர்.
இதில், கிராமமக்கள், பெண்கள் சமூக இடைவெளியை பயன்படுத்தியும், முகக்கவசம் அணித்தும் பங்கேற்று மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு பெற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், துணை தலைவர் தயாளன், பெரியராமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Disaster Awareness Training Camp ,RKpet ,Tiruvallur , Disaster Awareness Training Camp near RKpet, Tiruvallur
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு