வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்களை நேரடியாக அளிக்கலாம்: செயல் அலுவலர் தகவல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 15 வார்டுகளில் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை உள்பட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுகிறது. இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி, செயல் அலுவலர்  பிரேமா, கூறியதாவது, பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொசு மருந்து அடிக்கப்படுகிறது.

குறிப்பாக, சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க, அதன் உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்களது வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும். வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளியை பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும் குடிநீர், சுகாதார சீர்கேடு, எரியாத மின்விளக்கு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். அதற்கு, உடனடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Related Stories:

>