×

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து விழுப்புரத்தில் புதிய பல்கலை: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.இதுகுறித்து சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உயர்கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகள், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பிற உயர்கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் அகில இந்திய அளவில் 26.3 சதவீதம் என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் மிக அதிகமாக, அதாவது 49 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

சட்டத்துறை அமைச்சரின் கோரிக்கை மற்றும் விழுப்புரம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இந்த பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் பெயர்?
துரைமுருகன் (எதிர்க்கட்சி துணை தலைவர்): விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்குங்கள். அதற்கு உங்கள் பெயரை வேண்டுமானால் வையுங்கள். எங்கள் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தை ஏன் உடைக்கிறீர்கள்? முதல்வர்:பல்கலையை பிரித்து புதிய பல்கலைக்கழகம் தொடங்குகிறோம். இதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். பெயர் வைத்தால் விடவா போகிறீர்கள்? மாணவர்கள் கோரிக்கையை நிறை வேற்றுவது அரசின் கடமை. நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகிறது. பல்கலைக்கு என்ன பெயர் வைப்பது என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றா

Tags : Thiruvalluvar University ,university ,announcement ,Villupuram ,assembly ,Chief Minister , Thiruvalluvar University to be divided into 2 and new university in Villupuram: Chief Minister's announcement in the assembly
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...