×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செங்கோட்டையன் அண்ணன் மகன் திமுகவில் இணைந்தார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ஈரோடு வடக்கு மாவட்டம், அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்ணன் மகன் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன் (தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் - அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளர்), கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கோபி ஆர்.துரைசாமி ஆகியோருடன் திமுகவில் இணைந்தார்.  அப்போது, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், கோபி நகரச் செயலாளர் என்.ஆர்.நாகராஜ், கோபி ஒன்றியச் செயலாளர் எஸ்.ஏ.முருகன், நம்பியூர் ஒன்றியப் பொறுப்பாளர் பி.செந்தில்குமார், டி.என்.பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர் எம்.சிவபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : MK Stalin ,DMK ,Senkottaiyan ,nephew , In the presence of DMK leader MK Stalin, Senkottaiyan's nephew joined the DMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...