பெட்ரோல், டீசல் வரிவிதிப்பில் மாற்றம்: ஒருமனதாக மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரி விதிப்பில் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமானதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது: உலக பொருளாதாரம் அண்மை காலங்களில் குறைந்துவருகிறது. இந்த நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று நோயும் இணைந்ததன் விளைவாக உலக சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது எரிசக்தி சந்தைகளில் எதிரான தாக்கத்ைத உண்டாக்கும் மற்றும் பெட்ரோல் கச்சா மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

எனவே, மாநில நிதிகளை பாதுகாக்கவும், பெட்ரோலிய பொருட்களின் மீது நுகர்வோர் சார்ந்திருப்பதை குறைக்கவும், சேர்மங்களுடனோ அல்லது இல்லாமலோ உள்ள பெட்ரோலை பொருத்த வகையில், 34 விழுக்காட்டில் இருந்து, ‘15விழுக்காடு விலை மதிப்பீட்டின்படியான வரி உடன் லிட்டருக்கு 13.02 ரூபாய்கள் குறிப்பிட்ட வரிக்கும்’ மற்றும் அதிவேக டீசல் எண்ணெய்க்கு, 25 விழுக்காட்டிலிருந்து,‘11 விழுக்காட்டின்படியான வரி உடன் லிட்டருக்கு 9.62 ரூபாய்கள் குறிப்பிட்ட வரிக்கும்’ என தற்போதுள்ள வரி முறையை மாற்றுவதென அரசானது முடிவு செய்தது. அதன் பெயரில் 2020 ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி(திருத்தம்) சட்டமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமானது சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>