×

சென்னை மருத்துவமனையில் கொரோனாவுக்கு திருப்பதி எம்பி மரணம்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்ற ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி நேற்று மரணம் அடைந்தார். ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதி மக்களவை உறுப்பினர் பல்லி துர்கா பிரசாத் ராவ் (63). ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கடந்த மாதம் 14ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவர் உயிரிழந்தார். ஆனால் கடைசியாக எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுளது.


Tags : Tirupati ,hospital ,Chennai , Tirupati MP dies at Chennai hospital
× RELATED திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்...