×

கலிஃபோர்னியாவுக்கு கமலா ஹாரிஸ் திடீர் பயணம்..!! - காட்டு தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்!!!

வாஷின்டன்:  அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாநிலத்தில் காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆகஸ்ட் மாதம் மத்தியில் சிறிய அளவில் ஏற்பட்ட காட்டு தீ படிப்படியாக அதிகரித்து கலிஃபோர்னியா போன்ற 3 மாநிலங்களை புரட்டி போட்டிருக்கிறது. தொடர்ந்து மோசமான வானிலையால் அதிகரித்த காட்டு தீ ஒரு மாதத்தில் வனப்பகுதியில் இருந்த விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் என அனைத்தையும் சாம்பலாக்கி விட்டது. தடுப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீஸ் கலிஃபோர்னியாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். வெளி மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த கமலா ஹாரீஸ், தற்போது சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவுக்கு வந்துள்ளார். இதையடுத்து கலிஃபோர்னியாவுக்கு வந்த கமலா ஹாரிஸ் வன தீயால் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய மக்களை நேரில் கண்டு ஆறுதல் கூறினார். பின்னர், பேசிய அவர், உலக வெப்பமயமாதல் குறித்த உலகளாவிய கருத்துக்களுடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முரண்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், உலக நாடுகளுடன் இணைந்து புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

Tags : Kamala Harris ,trip ,California , Kamala Harris makes a surprise trip to California .. !! - Go in person and comfort the people affected by the wildfire !!!
× RELATED I Will not Be The Last : கமலா ஹாரீஸ்