×

2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவுமில்லை: இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே விளக்கம்

டெல்லி: 2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவுமில்லை என தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே விளக்கம் அளித்தார். திமுக எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார். 2ஜி சேவையை கைவிடுவது தொடர்பாக தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை எனவும், எந்த தொழில்நுட்பத்துடன் தகவல் தொடர்பு சேவையை வழங்குவது என்பது தொலைபேசி சேவை நிறுவனங்களின் விருப்பம் என கூறினார்.


Tags : government ,Sanjay Godrej , 2G service, abandonment, plan, no central government
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...