×

ரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது

தென்காசி: ரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரி நாடாரை கைது செய்த போலீசார் பெங்களூருவுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் 37,627 வாக்குகள் பெற்றிருந்தார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெட்ரா சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடார் ஆவார்.
தமிழ்நாட்டில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். இவர் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர். உடல் முழுவதும் தங்க நகைகளுடன் இவர் வலம் வந்தார். கடந்த ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டார். பெங்களூரு நகர குற்ற போலீசார் அவரை கேரளாவில் கோவளத்தில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
ரூ.16 கோடி மோசடி புகாரில் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இவர் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு நகர துணை கண்காணிப்பாளர் இவரை கைது செய்துள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை இவருடைய மற்ற கூட்டாளிகள் அனைவருமே தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லியை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குலம் தொகுதியில் பனங்காட்டுப்படை கட்சி சார்பாக இவர் போட்டியிட்டு 37,627 வாக்குகளை பெற்றிருந்தார். இவர் மூன்றாவது இடத்தை தக்கவைத்திருந்தார். இந்த நிலையில் ஹரி நாடாரை கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post ரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது appeared first on Dinakaran.

Tags : Panangattu Force Party ,Hari Nadar ,Kovalam, Kerala State ,Panangatu Force Party ,Coordinator ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள...