×

வாடிக்கையாளரின் பணத்தை பாய்லரில் சூடாக்கி பெற்றுக்கொள்ளும் தேனீர் கடை

புதுச்சேரி: இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் பரவிய நிலையில் புதுச்சேரியில் வெறும் இரட்டை இலக்கத்தில் கொரோனா நோயாளிகள் இருந்தனர். ஆனால் தற்போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படுபயங்கர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் பஸ், ரயில் என எந்த போக்குவரத்தும் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் வெளியூர் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளை வியாபாரிகள், பொதுமக்களும் தங்களால் முடிந்த வரை கொரோனா பரவலை தடுக்க பணியில் பங்களிப்பை செலுத்துகிறார்கள். இந்நிலையில் வில்லியனூரில் உள்ள ஒரு தேனீர் கடையில், தேனீர் அருந்த வரும் வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை பாய்லரில் வைத்து சூடாக்கிய பிறகே வாங்கி கொள்கிறார்கள். இதுகுறித்து அந்த கடை நிர்வாகிகளிடம் கேட்டபோது, கொரோனா ஊரடங்கால் நீண்ட நாட்களாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளர்வு ஏற்படுத்தப்பட்டதால் கடைகளை திறக்கிறோம். அதேநேரம் எங்களை பாதுகாக்க வேண்டும், எங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை சூடாக்கிய பின்பு வாங்கிக்கொள்கிறோம். பாய்லரின் சூட்டில் கொரோனா கிருமி அழியும் என்பதால் இவ்வாறு செய்கிறோம், என்றார்.

Tags : tea shop ,customer , Corona, Tea Shop
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு அஞ்சலக வாடிக்கையாளர் கூட்டம்