படப்பிடிப்பில் விபத்து ஆற்றில் மூழ்கிய ஜாக்கிசான்: பாதுகாவலர்கள் மீட்டனர்

66 வயதாகும் ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. ஆற்றில் ஜாக்கிசான், நடிகை மியா முகி ஆகியோர் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் அங்கிருந்த பாறையில் மோதி, தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சான் ஆற்றில் மூழ்கினார்.  மீட்பு குழுவினர் முகியை உடனடியாக மீட்டனர். ஆனால் ஜாக்கி சானை காணவில்லை. உடனடியாக தண்ணீரில் குதித்த ஜாக்கிசானின் பாதுகாவலர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு சேர்த்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விபத்தினை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்த போதும், சிறிது நேர ஓய்விற்கு பின் மீண்டும் அதே காட்சியில் நடித்தார் ஜாக்கிசான். இது பற்றி அவர் கூறும்போது, ‘அது சாதாரணமான ஒரு காட்சி தான். ஆனால் கிட்டத்தட்ட நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டேன். ஸ்கூட்டர் கவிழ்ந்ததால் நீருக்கு அடியில் சிக்கிக் கொண்டேன். என்ன நடந்தது என்று கூட நினைவில்லை. ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன்’’ என்றார்.

Related Stories: