×

திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் சென்னை ரவுடி சரண்

சென்னை: சென்னை, மாம்பாக்கத்தை சேர்ந்தவர் வனஜா தனசேகரன். திமுக பிரமுகரான இவர், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்துள்ளார். கடந்த 3ம் தேதி, மர்மநபர்கள் சிலர் இவரது வீட்டிற்கு சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொல்ல முயற்சித்துள்ளனர். இதுகுறித்து, வனஜா தனசேகரன் அளித்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக புதுபெருங்கொளத்தூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக்(எ) ஓட்டேரி கார்த்திக், ராஜேஷ் ஆகியோர் சேர்ந்து, வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், ஓட்டேரி கார்த்திக் நேற்று விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சரணடைந்தார்.Tags : Chennai Rowdy Charan ,bombing ,Villupuram Court ,DMK ,house , Chennai Rowdy Charan in Villupuram Court in the case of the bombing of the house of a DMK official
× RELATED வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம்!:...