பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா: கட்சியினர் மரியாதை

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் சென்னீர்குப்பம் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளையொட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் திமுக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார் நிர்வாகிகள் சி.சுந்தரமூர்த்தி, வி.பி.சுகன், எம்.மூர்த்தி, எஸ்.முத்துக்குமார், விஜயசாரதி, பாரதி, வி.ரமேஷ், ஏ.ஆனந்தன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட காக்காகண்டிகை பகுதியில் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திமுக கொடியேற்றி இனிப்புகள் மற்றும் சானிடைசர் வழங்கினார்.

இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில்  திமுக சார்பில் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதட்டூர்பேட்டை பேரூர் பொறுப்பாளர் டிஆர்பி பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட திமுக துணை செயலாளர் திருத்தங்கள் சந்திரன் பங்கேற்று நகரில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  பள்ளிப்பட்டு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமையில் கீசலம், நெடுங்கல், ஜெங்காலப்பள்ளி, சொரக்காய் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அண்ணா திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல், அம்மையார்குப்பத்தில் மூத்த நிர்வாகி பி.கே.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலைக்கு முன்னாள் கிளை  செயலாளர்கள் சி.ஜி.சண்முகம், ப.தே.கன்னியப்பன் ஆகியோர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். ஆர்.கே.பேட்டையில் விளக்கணாம்பூடி - பூதூர் சாலையில் திமுக சார்பில்  அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், கிழக்கு ஒன்றிய செயலர் பி.பழனி,  வட்ட பிரதிநிதி சி.சுப்பிரமணி, கவுன்சிலர் சி.வெங்கடேசன் பிரமிளா, ஏ.ஏழுமலை, கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி:  கவரப்பேட்டையில்  பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், வழக்கறிஞர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, அமலா சரவணன், கிழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன், தலைமை கழக பேச்சாளர் தமிழ் சாதிக், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், ஒன்றிய பிரதிநிதிகள் ராகவரெட்டிமேடு ரமேஷ், சி.கருணாகரன், அர்ஜூன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், உமாபதி, பிவிஜி. முரளி, வாசு, கோட்டக்கரை கிருஷ்ணன், முனியாண்டி, அயூப்கான், காளி, அக்கீம், பாலா, சாண்டில்யன், குட்டி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>