×

ஆபத்தான முறையில் தண்டவாளம் கடப்பதை தடுக்க திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் தடுப்பு வேலி

திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுக்க தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. முதல் பிளாட்பாரத்திலிருந்து இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்ல நடைமேம்பாலம் உள்ளது. ஆனால் பயணிகள் இதனை பயன்படுத்துவதில்லை. முதல் பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தை கடந்து இரண்டாவது பிளாட்பாரங்களுக்கு எளிதில் சென்றனர். திருமங்கலத்தை பொருத்தவரை முக்கிய பயணிகள் ரயில்கள் அனைத்தும் இரண்டாவது பிளாட்பாரத்தில்தான் நின்று செல்கின்றன.

இதனால் இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்ல பயணிகள், முதல் பிளாட்பாரத்தை கடக்க முயலும் போது எதிர்பாராவிதமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். ரயில்வே போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் பயணிகள் சட்டை செய்யவில்லை. தற்போது மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் முதல் மற்றும் இரண்டாம் பிளாட்பாரங்களை எளிதில் நடந்து கடந்து செல்வதை தடுக்கும் வகையில் இரண்டு பிளாட்பாரங்களுக்கு இடையே தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல் பிளாட்பாரத்திலிருந்து இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்ல விரும்பும் அனைவரும் நடைமேம்பாலத்தினை கடந்து தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோச் அறிவிப்பு பலகை திருமங்கலம் ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் போது முன்பதிவு பெட்டிகள் நிற்கும் இடம் குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் இல்லாத நிலை இருந்தது. தற்போது ரயில்வே நிர்வாகம் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் நிலவரத்தை அறிவிக்கும் பலகையை ஸ்டேஷனில் வைத்துள்ளது. இதனால் முன்பதிவு பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : railway station ,Thirumangalam ,crossing , Barrier fence at Thirumangalam railway station to prevent dangerous crossing of tracks
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதியரின் கால்கள் முறிந்தன