×

நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: நீட், ஜே.இ.இ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா மத்தியில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற நீட், ஜே.இ.இ தேர்வுகளை பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுதமுடியவில்லை தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தேர்வு எழுத இருந்த மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டதாலும், கட்டுப்பாடு பகுதியில் இருந்தவர்கள் எனவும் இதுபோன்ற பல காரணங்களால் பல மாணவர்கள் தேர்வு எழுதமுடியவில்லை, எனவே தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதாத மாணவர்களின் பட்டியலையும் அந்த மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : re-examination ,Supreme Court ,examination ,JEE , NEED, JEE Exam, Unwritten, For Students, Re-Examination, Supreme Court
× RELATED தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு...