×

விராட் கோலி முன்னின்று அணியை வழிநடத்துவதில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்: டிவில்லியர்ஸ் புகழாரம்

துபாய்; இந்திய அணி கேப்டன் விராட் கோலி அணியை வழி நடத்தி செல்வதில் முன்னுதாரணமாக இருக்கிறார் என்று தென்னாபிரிக்க அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். 2020 சீசனில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 19-ந்தேதி போட்டி நடைபெற இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனுபவ வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இடம் பிடித்துள்ளனர். விராட் கோலி கேப்டனாக உள்ளார்.

விராட் கோலி முன்னின்று அணியை வழிநடத்துவதில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.பி. டிவில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். நடப்பது பற்றிய தெளிவு ஒரு மாதத்திற்கு முன்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வந்தது என்று நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கு பி.சி.சி.ஐ. குறிப்பிடத்தக்க வேலையைச் செய்துள்ளது, நாங்கள் போட்டிகளில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம். நெறிமுறையுடன் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதற்கான பாராட்டை விராட் கோலிக்கு கொடுத்தாக வேண்டும். அவர் முன்னின்று வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். கேப்டன் முன்னின்று வழிநடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது’’ என்றார்.

Tags : Virat Kohli ,team ,De Villiers , Virat Kohli is an example of leading the team to the front: De Villiers praise
× RELATED அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த...