திருச்செங்கோட்டில் பேக்கரி கடையில் தீ விபத்து

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வாலரைக்கேட்டில் குமார் (45) என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில், பேக்கரி கடையில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்து, பக்கத்து கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் கடைக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். தீவிபத்து குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>