சித்தோடு அருகே ஆடு திருடுவதை தடுக்க முயன்ற முதியவர் கொலையில் 3 பேர் கைது

பவானி: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மேட்டுக்காட்டை சேர்ந்தவர் முனுசாமி (75). இவர், ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, மாலையில் வீடு திரும்புவார். கடந்த 12ம் தேதி பெரியார் நகர், பாங்காடு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், முனுசாமி அங்கு சடலமாக கிடந்ததை அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சாந்தி என்ற பெண் பார்த்துள்ளார். முனுசாமியின் இரு கால்கள் கயிற்றாலும், இரு கைகள் துணியாலும் கட்டப்பட்டிருந்தன.

அவரது வாயும், மூக்கும் துணியால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.இது குறித்து சித்தோடு போலீசுக்குக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முனுசாமி கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது முனுசாமியை கொலை செய்தது பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (33), அதே ஊரை சேர்ந்த சுதாகர் (20), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (34) என தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஆடு திருட பயன்படுத்திய மொபட்டை பறிமுதல் செய்தனர். இவர்கள் திருடிச் சென்ற ஆட்டை குமாரபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடையில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories:

>