×

காஷ்மீர் எல்லையில் 9 மாதத்தில் 3,186 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது: மத்திய அரசு

டெல்லி: காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில, பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7 வரையிலான காலகட்டத்தில் 778 கி.மீ., தூரம் கொண்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 198 கி.மீ., தூரமுள்ள சர்வதேச எல்லைப்பகுதியிலும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 242 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாதமும் 350 முதல் 400 முறை அத்துமீறியுள்ளது தெரியவந்துள்ளது. ராணுவ ஆவணங்களின்படி 2017-ல் 971, 2018-ல் 1,629, 2019-ல் 3,168 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது. சீனாவை எப்போதும் ஆதரிக்கவே பாகிஸ்தான் விரும்பும் எனவும், பனிக்காலம் துவங்குவதற்கு முன்னர் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கவும் விரும்புகிறது என ராணுவ அதிகாரி கூறினார். பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.


Tags : military ,Pakistani ,attacks ,border ,Kashmir ,government , Kashmir border, 3,186 times in 9 months, Pakistan, attack
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின் போது 2...