×

சீனாவை வீழ்த்தி ஐக்கிய நாடுகளின் பெண்கள் ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா: சீனாவுக்கு பாதி உறுப்பு நாடுகளின் ஆதரவு கூட கிடைக்கவில்லை

நியூயார்க் : ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பினராக சீனாவை வீழ்த்தி இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பு ECOSOC. இதன் பெண்கள் நிலை தொடர்பான ஐ.நா. அமைப்புதான் UNCSW.இதில் உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தியா, ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்ட நிலையில், 54 உறுப்பு  நாடுகள் வாக்களித்தனர். இதில் சீனாவுக்கு பாதி உறுப்பு நாடுகளின் ஆதரவு கூட கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டதாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அனைத்து நிலைகளிலும் பெண்களின் மேம்பாடு மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதை வரவேற்கும் வகையில் இந்த தேர்வு அமைந்துள்ளதாக திருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கவுரம்மிக்க ECOSOC உறுப்பினராக இந்தியா வென்றுள்ளது! இந்தியா UNCSW-ன் உறுப்பினராகி உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அத்தனை நாடுகளுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.ஐநாவின் UNCSW-ல் 2025-ம் ஆண்டு வரை அதாவது 4 ஆண்டுகள் இந்தியா உறுப்பினராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : China ,India ,United Nations Commission on Women ,member states , India, Ancient, Language, Tamils, P. Chidambaram, Comment
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...