×

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா..!! - தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக புகார்!!!

வாஷிங்டன்:  தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி வேலை வாங்குவதாக கூறி, சீனாவின் 5 உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க கோரும் மசோதா அமெரிக்கா பார்லிமெண்டில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.  இதில் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை இனத்தவர் வசிக்கின்றனர்.

10 லட்சத்திற்கும் அதிகமான இந்த சிறுபான்மையினரை முகாம்களில் அடைத்து கட்டாயப்படுத்தி பொருட்கள் தயாரிப்பதாக சீன அரசு மீது மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதற்கு பதிலளித்த சீன அதிகாரிகள் முகாம்களில் சிறுபான்மையின மாணவர்களின் மத தீவிரவாத போக்கை மாற்ற பயிற்சி அளித்து மாண்டரின் மொழி கற்பிக்கப்படுவதாகவும், கட்டாய பணியில் ஈடுபடுத்தவில்லை எனவும் கூறுகின்றனர். இந்த நிலையில், தற்போது சீனாவின் 5 உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ், டிக் டாக் செயலி என அமெரிக்கா-சீனா இடையிலான மோதல் புதுப்புது வடிவமெடுத்து வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக உற்பத்தியை அதிகரிக்க தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டிருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், தொழிலாளர்களை வைத்து பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றனர். இது நவீன அடிமை முறை என்றும் அமெரிக்கா விமர்சித்திருக்கிறது. மேலும் தொழிலாளர்களை வதைத்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தங்கள் நாட்டில் விற்கப்படுவதை தடுக்க பருத்தி, தக்காளி, கணினி உபகரணங்கள் உள்ளிட்ட 5 சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டு வணிகர்கள் தொழிலாளர் நலனுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள் என்றும், அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Tags : Chinese ,US , Chinese imports, goods, ban
× RELATED எல்லை தாண்டி வந்த சீன வீரர் ஒப்படைப்பு