ஆக்ராவின் முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சத்ரபதி சிவாஜியின் பெயரை சூட்டினார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள முகலாய அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சத்ரபதி சிவாஜியின் பெயரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சூட்டினார். ஆக்ராவில் இருக்கும் உலக அதிசயமான தாஜ்மஹாலின் கிழக்கு வாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், முகலாய அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ரூ. 140 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகம், உபியில் முதல்வராக இருந்த சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவால் துவக்கப்பட்டது.கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த கட்டுமானப்பணியை மாநில சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த அருஙாட்சியக  திட்டபணிகளை முதல்வர் ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் ஆக்ராவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அம்மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் யோகியின் காணொளியில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அவர்,  ஆக்ராவின் சிற்பகிராமம் பகுதியில் கட்டப்பட்டு வரும் முகலாயர் அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செய்ய இருப்பதை அறிவித்தார்.

இந்த பெயர் மாற்றத்திற்கானக் காரணமாக முதல்வர் யோகி கூறும்போது, ‘முகலாயர்களை ஒரு சிறந்தவர்களாக பார்க்க முடியாது. நம் நாயகர்களாக முகலாயர்களை எப்படி கருத முடியும்? இதற்கு தேசியவாதத்தை ஊட்டி, பொதுமக்களின் சுயமரியாதை காத்த மன்னர் சிவாஜியே உகந்தவர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் தான் எங்கள் ஹீரோ,’ எனத் தெரிவித்தார்.

Related Stories:

>