×

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது உண்மை..!! - ஜெர்மனி இராணுவ ஆய்வகப் பரிசோதனையில் உறுதி!!!

பெர்லின்:  ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது உண்மை என்பதை ஜெர்மனி உறுதிப்படுத்திருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின்போது, மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டார். 10 நாட்களுக்கும் மேல் கோமா நிலையில் இருந்த அலெக்சி நவல்னி, தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், கருவிகளின் உதவியின்றி அலெக்சி நவல்னி சுவாசிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  இந்நிலையில், அலெக்சியின் ரத்த மாதிரிகளை சோதித்த ஜெர்மனி இராணுவ பரிசோதனை கூடம், ரஷ்ய தயாரிப்பான நோவிசாக் எனப்படும் விஷம் கலந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவ்வகை நஞ்சு ரத்தத்தில் கலந்தால், ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை எடுக்காத நிலையில், மரணத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

ஏற்கனவே அலெக்சி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதை பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஜெர்மனியும் அதனை அம்பலப்படுத்திருக்கிறது. ஆனால், ஜெர்மனியின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Tags : Alexei Navalny ,Russian ,German , To the Russian opposition leader, Alexei Navalny, poison, truth, in a laboratory test, confirmed
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...