×

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் :வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.


Tags : Grandfather Anna ,Birthday ,MK Stalin ,statue ,DMK ,Anna ,Valluvar Kottam , Grandfather Anna, Birthday, Valluvar Kottam, Anna Statue, MK Stalin, Respect!
× RELATED தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்....