×

தாயுடன் முன்விரோதத்தால் ஆத்திரம் கரண்டியால் சரமாரி அடித்து குழந்தையை கொல்ல முயற்சி: உறவினர் கைது

ஆவடி: புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 12வது தெரு சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (32). இவரது மனைவி பாக்கியலட்சுமி (26). தம்பதிக்கு பிரகாஷ்ராஜ் (5), கோகுல்ராஜ் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். பாக்கியலட்சுமியின் தங்கை பவானி (20). இவரது கணவர் அருண்குமார் (22). கடந்த மாதம் 18ம் தேதி அருண்குமார் தனது மனைவி பவானியுடன் பட்டாபிராம் ராஜீவ்காந்தி நகர் வள்ளலார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். அவர்கள் வரும்போது பாக்கியலட்சுமியின் 2வது மகன் கோகுல்ராஜை அழைத்துக்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி கோகுல்ராஜ் வீட்டு படிக்கட்டில் இருந்து விழுந்து தலையில் காயமடைந்ததாக கூறி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணையில், அருண்குமார், பவானியை காதலித்து திருமணம் செய்வதற்கு ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து அருண்குமார், கரண்டியால் கோகுல்ராஜை சரமாரியாக தாக்கியது தெரிந்தது. இதனையடுத்து, போலீசார் அருண்குமாரை நேற்று மாலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Tags : Relative , Hostility with mother, rage, hitting the barrage with a spoon, child, attempt to kill, relative arrested
× RELATED மனைவியை வீட்டிற்கு அனுப்ப மறுத்த...