×

காதலன் வீட்டில் பட்டதாரி தர்ணா

அண்ணாநகர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதமி (25). எம்ஏ பட்டதாரியான இவர், சென்னை திருமங்கலத்தில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும், முகப்பேரை சேர்ந்த விஜயும் (29) ஆறு மாதமாக காதலித்து வந்தனர். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி, கவுதமியுடன்விஜய் உல்லாசமாக இருந்துள் ளார். பின்னர் ஜாதியை குறிப்பிட்டு திருமணத்திற்கு விஜய் மறுத்துள்ளார். இதுபற்றி கடந்த மாதம் 3ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் கவுதமி புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கவுதமி நேற்று முன்தினம்  மாலை காதலன் விஜய் வீட்டு ழுன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Tags : Tarna ,graduate ,house , Boyfriend home, graduate, Tarna
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...