×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு போலீசார் விழிப்புணர்வு

ஊத்துக்கோட்டை: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். வீட்டில் தனியாக இருக்கும் சிறு குழந்தைகளுக்கு ஒரு சிலர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். மேலும், ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடக்கிறது. இதுகுறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காஞ்சி சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி ஆகியோர் மேற்பார்வையில் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஊத்துக்கோட்டை மேற்கு கால்வாய்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, எஸ்ஐ ராக்கிகுமாரி கூறியதாவது, “வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடன் அழைத்து செல்ல வேண்டும். முக்கியமாக பெண் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டும். அக்கம் பக்கத்து வீடுகளில் விட்டுச்செல்லகூடாது. தற்போது ஊரடங்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துகிறார்கள். அவ்வாறு ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்போது, பொற்றோர்கள் உடன் இருக்க வேண்டும்” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags : Girl children, security, police awareness
× RELATED 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை...