×

நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்திற்கு நேற்று சென்ற திமுக எம்.பிக்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துடன் கூட்டத் தொடரை துவங்கினார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எம்பி. டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, கதிரவன், வில்சன் என அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நீட் தேர்வு மட்டுமில்லாமல் புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ‘நீட் தேர்வை ரத்து செய்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட முககவசத்தையும் திமுக எம்பிக்கள் அணிந்திருந்தனர்.

Tags : DMK ,protest , Neat choice, vs., DMK demonstration
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...