×

போக்குவரத்துக்கு லாயக்கற்ற ஓரிக்கை புறவழிச்சாலை: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த பெரியார் நகரில் தொடங்கும் ஓரிக்கை புறவழிச்சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாலாஜாபாத் வழியாக வந்தவாசி, செய்யாறு, வேலூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், காஞ்சிபுரம் நகருக்குள் வராமல் செல்ல ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். பெரியார் நகரில் இருந்து மிலிட்டர் சாலை வழியாக செவிலிமேடு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சின்ன ஐயங்குளம், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இவர்கள் மருத்துவம், கல்வி, வேலை உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். சின்ன ஐயங்குளத்தில் இருந்து களக்காட்டூர் செல்லும் சாலையில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது.
இந்நிலையில் மிலிட்டரி சாலை, ஆதிசங்கரர் நகரில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால்  பைக்கில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். ளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சுமார் 2 அடி ஆழமான இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. எனவே பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Public ,motorists , Traffic, unplanned ordeal, bypass, public, motorists suffer
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...