×

விஷவாயு தாக்கி வாலிபர் சாவு

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு, திருநீர்மலை செல்லும் பிரதான சாலை சந்திப்பில் தனியார் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு திருநீர்மலையை சேர்ந்த பழனி (35) உள்பட சிலர், ஊழியர்களாக வேலை செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காலை பழனி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, விஷவாயு தாக்கி சடலமாக கிடந்த பழனியை மீட்டனர். பின்னர் குன்றத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Death , Death of a youth by poison gas
× RELATED புதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை