×

மும்பையிலிருந்து வெளியேறுகிறேன்: கங்கனா திடீர் முடிவு

மும்பையிலிருந்து வெளியேறுவதாக நடிகை கங்கனா ரனாவத் கூறினார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் மகாராஷ்டிரா அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறி வந்தார் கங்கனா ரனாவத். இதற்கிடையே அவரது அலுவலக கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன் ஷாருக்கானின் அலுவலகமும் இதுபோல் விதிமுறை மீறி கட்டியதாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நடிகர்களின் கட்டிடமும் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக இருப்பதாகவும் மும்பையில் தலிபான்கள் ஆட்சி நடப்பதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் கங்கனா. இந்நிலையில் கடந்த 9ம் தேதி அவரது அலுவலகத்தின் ஒரு பகுதி மட்டும் இடிக்கப்பட்டது.

இதையடுத்து மகாராஷ்டிரா கவர்னரை நேரில் சந்தித்து கங்கனா இது தொடர்பாக முறையிட்டார். இந்நிலையில் அவர் மும்பையிலிருந்து வெளியேறுவதாக டிவிட்டரில் கூறியுள்ளார். ‘தொடர் தாக்குதல்கள், எனது வீடு மற்றும் அலுவலகத்தை இடிக்க நடந்த முயற்சி என மும்பையில் தங்கியிருந்த நாட்களில் நான் அச்சுறுத்தலுக்கு ஆளான விதம், எனக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பு ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டதை இரு மடங்கு உண்மையாக்கி உள்ளது. கனத்த இதயத்துடன் மும்பையிலிருந்து வௌியேறுகிறேன்’ என்றார்.

Tags : Mumbai ,Kangana , Leaving Mumbai: Kangana abrupt end
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...