×

வுகான் ஆய்வகத்தில் உருவானது கொரோனா: சீன வைராலஜிஸ்ட் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லிமெங் யான் அதிர்ச்சித் தகவலை  வெளியிட்டுள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப் படைக்கிறது.  வுகான் இறைச்சி மார்க்கெட்டில் இருந்து இந்த வைரஸ் உருவானதாக முதலில் கூறப்பட்டாலும், வுகான் ஆய்வகம் மீது பெரும் சந்தேகம் ஏற்பட்டது.  ஆனால் இந்த விஷயத்தில் சீன அரசு எந்த ஆதாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், சீனாவை சேர்ந்த  வைராலஜிஸ்ட்டான டாக்டர் லி-மெங் யான் கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம்  இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு என்னிடம் பல ஆதாரங்கள்  இருக்கின்றன. கொரோனா பதிவாகியபோது உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை  அறிந்திருந்தாலும் சீன அதிகாரிகள் எனது எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இந்த வைரஸ் இயற்கையிலிருந்து வந்ததல்ல. உள்ளூர் மருத்துவர்கள்  மற்றும் சில விஞ்ஞானிகள் மூலமாக இது தயாரிக்கப்பட்டது.

இந்த ஆபத்து குறித்து உலகிற்கு தெரியப்படுத்த முயற்சிக்கையில், சீன அதிகாரிகள் என்னை அச்சுறுத்தினர். இதன் காரணமாக நான் சீனாவை விட்டு  அமெரிக்கா வர வேண்டியிருந்தது. என்னைப் பற்றி வதந்திகளை பரப்புவதற்கும், எனது அனைத்து தகவல்களையும் நீக்குவதற்கும் சீனா தனி  குழுவையே நியமித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கொரோனா விவகாரத்தில் சீன அரசுக்கு எதிராக பேசி வரும் லிமெங் தனது பாதுகாப்பிற்காக  அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.



Tags : Corona ,virologist ,Chinese ,lab ,Wuhan , Corona: Chinese virologist shocked by Wuhan lab
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...