×

தொடர்மழையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக, கொடைக்கானலுக்கு நேற்று குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இந்த மழை நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் நகர் முழுவதும் கடும் குளிர் காற்று வீசியதுடன், சாலைகளில் ஆங்காங்கு மழைநீர் தேங்கி நின்றது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நேற்று குறைந்து காணப்பட்டது.

பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட 3 பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மழைக்கு பயந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களிலிருந்து இறங்கவில்லை. தொடர்ந்து மாலை வரை சாரல் மழை நீடித்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

Tags : Tourist arrivals ,Kodaikanal , Tourist arrivals to Kodaikanal are low due to continuous rains
× RELATED தொடர் விடுமுறை இருந்தும் சுற்றுலா...