×

இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்; மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியை காப்பாற்றுவதை விட, கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா இந்தி மொழிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் வீடியோ செய்தியையும் அமித்ஷா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; இந்தி என்பது இந்திய கலாசாரத்தில் இருந்து அகற்ற முடியாதது. ஒருதேசத்தை அதன் எல்லைகள், புவியியல் அடிப்படையில் அடையாளப்படுத்துகிறோம்.

ஆனால் ஒருதேசத்தின் மிகப் பெரும் அடையாளம் என்பதே மொழி. இந்தியாவில் பல்வேறு மொழிகள் ஒற்றுமையின் பலமாக இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் கலாசார, மொழி வேறுபாடுகள் இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக இந்திதான் ஒருதேசமாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய நாட்டின் உள்துறை  மந்திரியாக இருக்கும் அமித்ஷா அவர்கள், இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்? வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும் ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா அவர்கள் உணர வேண்டும். இந்தியைக் காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரைக் காப்பாற்றுவதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Amitsha ,MK Stalin ,Corona ,India , Amitsha should focus on saving the people from the corona, rather than saving India; MK Stalin
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...