×

உடன்குடி அனல்மின் நிலையம் பகுதியில் மாடுகளை வலை வைத்து பிடிக்கும் கும்பல்: பொதுமக்களை கண்டதும் ஓட்டம்

உடன்குடி: உடன்குடி அனல்மின்நிலைய பகுதியில் கம்பியினால் ஆன வலைகளை வைத்து மாடுகளை பிடிக்கும் கும்பல் பொதுமக்களை கண்டதும் அரிவாள், கயிறு உள்ளிட்டவைகளை வீசி விட்டுச் சென்றனர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடன்குடி, நயினார்பத்து, சீர்காட்சி பகுதிகளில் ஏராளமான மாடுகள் தொடர்ந்து மாயமாகி வருகிறது. மேலும் நயினார்பத்தில் இருந்து உடன்குடி அனல்மின்நிலையம் பகுதிக்கு காட்டு வழிப்பாதைகள் உள்ளது. இந்த வழித்தடத்தில் தான் தினமும் ஏராளமான மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் சில மாதங்களாக தொடர்ந்து மாடுகளுக்கு கம்பியிலான வலைகள் வைத்து பிடிப்பதும், வேட்டையாடும் கும்பல்கள் துப்பாக்கி மூலம் சுட்டு பிடிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நயினார்பத்து பகுதியை சேர்ந்தவர்கள் விறகு பொறுக்கச் சென்றனர். அப்போது மாடு ஒன்று கம்பியிலான வலையில் சிக்கி மாட்டிக்கொண்டது. அப்போது மாட்டை அவிழ்த்து விட சென்றபோது அங்கிருந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுமக்களை கண்டதும் தப்பியோட்டம் பிடித்தனர்.

தப்பியோடிய மாடுகளை திருடும் கும்பலை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர் அப்போது  அரிவாள், கயிறு, கம்பிகளை வீசிச் சென்றனர். மெஞ்ஞானபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மாடுகளை திருடும் கும்பலை தேடி வருகின்றனர்.Tags : gang ,area ,Udankudi Thermal Power Station ,public , Udankudi, thermal power station, cow
× RELATED திருச்சி அருகே பயங்கரம் திமுக...